Advertisement

பாசனத்திற்காக18 ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு

கூடலுார் : லோயர்கேம்ப் பெரியாற்றில் இருந்து 18 ம் கால்வாய்க்கு நேற்று வினாடிக்கு 98 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

லோயர்கேம்ப் பெரியாற்றின் தலைமதகு பகுதியில் இருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடை வரை செல்லும் 18 ம் கால்வாய்த்திட்டம் 41 கி.மீ., துாரம் கொண்டதாகும்.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் பெரியாறு அணை நீர் இருப்பை பொருத்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் லோயர்கேம்ப் தலைமதகு பகுதியில் ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்துவைத்தார். வினாடிக்கு 98 கன அடி நீர் வீதம் 30 நாட்களுக்கு இத்தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஊரகவளர்ச்சி திட்ட இயக்குனர் திலகவதி, 18 ஆம்கால்வாய் விவசாய சங்க தலைவர் ராமராஜ், செயலாளர் திருப்பதிவாசகன், துணைத்தலைவர்கள் காளிமுத்து, தங்கராஜ், பொருளாளர் பாண்டியன், இணைச்செயலாளர் சலேத்து உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.முதல்வர் அறிவிப்பில் குழப்பம்: கடந்த ஆண்டு முதல் 18 ம் கால்வாய் சுத்தகங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறுவரை 14.10 கி.மீ, நீட்டித்து தண்ணீரும் திறக்கப்பட்டது.

இதனால் மேலும் 2225 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. இதனால் புதிய திருத்திய அரசாணைப்படி 18 ம் கால்வாய்க்கு வினாடிக்கு 98 கன அடிவீதம் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அனுமதி உள்ளது. ஆனால் முதல்வர் பழனிசாமி, 18 ம் கால்வாயின் கீழ் உள்ள 4614.25 ஏக்கர் ஒரு போக பாசன நிலங்களுக்கு, 30 நாட்களுக்கு வினாடிக்கு 98 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.பெரியார், பி.டி.,ராஜன் கால்வாய்கள்உத்தமபாளையம்: முல்லைப் பெரியாறு பாசனத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது.

இதுதவிர தந்தைபெரியார் மற்றும் பி.டி.ராஜன் கால்வாய்கள் மூலம் 5 ஆயிரத்து 146 ஏக்கர் ஒரு போக பாசன நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு ராமசாமிநாயக்கன்பட்டி அருகில் கலெக்டர் பல்லவிபல்தேவ் தண்ணீர் திறந்தார். இதன்படி சின்னமனுார், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, தாடிச்சேரி, தப்புக்குண்டு, கொடுவிலார்பட்டி, வெங்கடாச்சலபுரம், ஜங்கால்பட்டி, கோவிந்தநகரம், பாலகிருஷ்ணாபுரம், சீப்பாலக்கோட்டை, பூமாலைக்குண்டு, தர்மாபுரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 146 ஏக்கர் பாசன வசதி பெறும். உத்தமபாளையம் தாலுகாவில் 830 ஏக்கர், தேனி தாலுகாவில் 4 ஆயிரத்து 316 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் உத்தமபாளையம் சப்கலெக்டர் வைத்திநாதன், உதவி செயற்பொறியாளர் அன்புச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமன், விவசாயிகள் பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement