dinamalar telegram
Advertisement

நீர்வரத்து அதிகரிப்பால் உயர்கிறது சண்முகாநதி அணை நீர்மட்டம்

Share
கம்பம் : மேகமலையில் மழையால் சண்முகாநதி அணைக்கு வினாடிக்கு 50 கனஅடிநீர் வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்துவருகிறது.

மாவட்டத்தில் ராயப்பன்பட்டி மலையடிவாரத்தில் உள்ளது சண்முகாநதி அணை. நேரடி பாசன வசதியளிக்காவிட்டாலும் இப்பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான கிணறுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர வழி வகுக்கிறது. பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் இந்த அணை நிரம்பும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் அணை திறக்கப்படும். மொத்த உயரம் 52.5 அடியாகும்.கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் சாரல் மழையில் நீர்மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து வந்தது. அணைக்கு வினாடிக்கு 6 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் மேகமலையில் வடகிழக்கு பருவமழையால் நேற்று காலை முதல் வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 45 அடியானது. கடந்தாண்டு இதேநாளில் முழு கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.

பொதுப்பணித்துறையினர் கூறுகையில், நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னமும் சில, நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும். அதன்பின் பாசனத்திற்காக அணையை திறக்க அரசிற்கு பரிந்துரை செய்யப்படும், என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement