Advertisement

மாற்றுப்பாதையை சீரமைக்க போராட்டம்

மூணாறு : கொச்சி- -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவால் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் அதற்குப்பதில் மாற்றுப்பாதை சீரமைத்து பயன்பாட்டிற்குவிட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கொச்சி-- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து தடை ஏற்பட்டு அந்த வழியாக 23 கி.மீ., தொலைவில் உள்ள சின்னக்கானல், சூரியநல்லி பகுதிக்கு செல்ல முடியவில்லை.தற்போது பள்ளிவாசல், குஞ்சுதண்ணி, முட்டுக்காடு, பெரியகானல் வழியாக 60 கி.மீ., பூப்பாறை வழியாக 80 கி.மீ.,துாரம் பயணித்துபொது மக்கள், சுற்றுலா பயணிகள் சென்று வருவதால், பல்வேறு சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.மூணாறில் இருந்து பழைய தேவிகுளம் வழியாக சின்னக்கானல் செல்ல ரோடு உள்ளது.அந்த வழியில் பழைய தேவிகுளம் முதல் சின்னக்கானல் வரை 5 கி.மீ., துாரம் ரோடு புதர் மண்டி கிடப்பதால், தற்போது டூவீலர்கள் மட்டும் சென்று வருகின்றன. அந்த ரோட்டை சீரமைத்தால்,தேனிக்கு அவசர தேவைக்கு சிறிய ரக வாகனங்களும், சின்னக்கானல்,சூரியநல்லி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் சென்று வரலாம்.போராட்டம்: அந்த ரோட்டை சீரமைத்து பயன்பாட்டிற்குவிட வலியுறுத்தி, சின்னக்கானல் ஊராட்சி உறுப்பினர்கள் ஸ்ரீதேவி , சைமன்,ரோசம்மா,சேகர்ராம் ஆகியோர் தலைமையில் நேற்று பொது மக்கள் சம்பந்தப்பட்ட ரோட்டில் போராட்டம் நடத்தினர். இந்திய கம்யூ., சின்னக்கானல் பகுதி செயலாளர் ஏசுதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.----------

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement