Advertisement

வங்கிகளில் போலி நகை அடமான மோசடி; திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் கைது

தேனி : தேனி பொதுத்துறை வங்கிகளில் அடகுவைக்க போலி நகை தயாரித்துக்கொடுத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமச்சந்திரனை 34, போலீசார் கைது செய்தனர்.

தேனி வ.உ.சி., ரோட்டைச் சேர்ந்தவர் கற்பகச்செல்வி 49. இவர் இந்தியன்வங்கியில் போலி நகை வைத்து மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து ஜூன் 30ல் நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதைப்பார்த்த பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் கிஷோர் தனது வங்கியில் விசாரித்ததில், கற்பகச்செல்வி அங்கும் 99.400 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ.ஒரு லட்சத்து 87 ஆயிரம் கடன் பெற்றது தெரியவந்தது.அந்த நகைகளை ஆய்வு செய்தபோது அனைத்தும் போலி என தெரியவந்தது.

இதையடுத்து கிேஷார் புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கற்பக செல்வியை கைது செய்தனர். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மோசடிக்கு உதவியாக இருந்த உமாதேவி 47, என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு நகை செய்து வழங்கிய திண்டுக்கல் அம்பாத்துரையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பாண்டிசெல்வம், இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து போலி நகை தயாரிக்க பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.இதேபோல் கற்பக செல்வி கனரா வங்கியிலும் போலி நகை வைத்து மோசடி செய்துஉள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement