Advertisement

டவுட் தனபாலு

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: இஸ்லாமியருக்கு எதிராக பேசினேன் என, என் மீது, தி.மு.க., பொய்யான புகாரை கூறி வருகிறது. சிறுபான்மை ஜாதியைச் சேர்ந்தவன் என்பதால், என் வளர்ச்சி பிடிக்காமல், இது போன்ற செயலில், தி.மு.க.,வினர் ஈடுபடுகின்றனர். பெரும்பான்மை ஜாதியினர் மீது, இப்படி ஒரு புகாரை அவர்கள் தைரியமாக கூறுவரா?

'டவுட்' தனபாலு: மதத்தின் அடிப்படையில் தான், பெரும்பான்மை மதம், சிறுபான்மை மதம்
என, ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் கூறி வருகின்றனர். இப்போது, ஜாதி ரீதியிலும், சிறுபான்மை, பெரும்பான்மை வந்துவிட்டதா... இதற்கும் காரணம், அரசியல்வாதிகள் தான். என் சந்தேகம் சரி தானே?
முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம்: ஜெ., மீது பொய் வழக்குகள் தொடர்ந்து, அவருக்கு துன்பத்தை ஏற்படுத்திய, தி.மு.க.,வினரை தண்டிக்க, தேர்தல் களம் தான் சரியானது. அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிப்பதன் மூலம், அவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: ஆட்சி, அதிகாரம், போலீஸ், நீதிமன்றங்கள் உங்கள் கையில் உள்ளன. ஜெ., மரணத்திற்கு, தி.மு.க.,வினர் தொடர்ந்த வழக்குகள் தான் காரணம் என, நீங்கள் உண்மையாகவே நினைத்திருந்தால், இந்த மூன்று ஆண்டு காலம் ஏன் சும்மா இருந்தீர்கள் என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: நம் முதல்வர், மத்திய அரசுக்கு பணிந்து, கூனி, குறுகி, அடிமை போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான், வாய்க்கு வந்த புகார்களை எல்லாம், தி.மு.க., மீது கூறி வருகிறார்.
'டவுட்' தனபாலு: மத்திய அரசின் அடிமை போல, கூனி குறுகி, முதல்வர் இ.பி.எஸ்., எங்கும் இருந்ததில்லை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்; நீங்களும் அறிவீர்கள். எனினும். அரசியல் ரீதியாக இவ்வாறு கூறுகிறீர்கள். சரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதற்கு ஆதாரம் கேட்ட நீங்கள், முதல்வர் கூனி குறுகி எங்கு நின்றார் என்பதற்கான ஆதாரங்களை அளியுங்கள். இதெல்லாம் வெற்றுப் பேச்சு என்ற என், 'டவுட்' சரி தானே?


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    பெரும்பாலும் மேல் ஜாதியினர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஜாதியை பற்றி பேசி ஆதாயம் தேடவேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை...

  • பார்ப்பான் -

    ஓஓஓஓஓஓ

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை எதிர்கொள்ள இயலாத நிலையில், ‘ஆஹா , நான் கீழ் ஜாதி என்பதால் அவதூறு சொல்கிறார்’ என்பது standard கூக்குரல்தானே

Advertisement