Advertisement

ஓராண்டுக்குள் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள்

புதுடில்லி: வரும் ஓராண்டுக்குள் நாடு முழுவதும் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும் என தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்ய பெரும் முயற்சி செய்கிறது. இது அவ்வப்போது நமது வீரர்களால் தடுக்கப்பட்டு வருகிறது. இந்திய படை நடவடிக்கையால் பாகிஸ்தான், இந்திய தூதரை வெளியேற்றியதுடன் , ரயில் சேவைகளை துண்டித்தது. தற்போது இந்தியாவில் இருந்து செல்லும் தபால் சேவைகளையும் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தி விட்டது. 2 மாதங்களாக இந்த சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக போஸ்டல் நியதிப்படி முற்றிலும் தவறானது.

நாட்டின் முன்னேற்றமே மத்திய அரசின் நோக்கமாகும் . குறிப்பாக டிஜிட்டல் மயம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவும். தற்போது டிஜிட்டல் பண பரிமாற்றம் பல மடங்காக அதிகரித்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இன்னும் நாட்டில் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும். இதற்கான பணிகள் துவங்கி விட்டது. இன்னும் ஓராண்டுக்குள் டிஜிட்டல் கிராமங்கள் முழு அளவில் நிறைவேறும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (22)

  • arudra1951 - Madurai,இந்தியா

    விளக்குமாருக்கு பட்டு குஞ்சம்

  • Nepolian S -

    இதற்கு முன் அறிவித்தவை எல்லாம் முடிந்து விட்டது இப்போது புதிதாக... ஆணியே புடுங்க வேண்டாம்... எல்லாம் வாயில் வடைசுடுவதுதான்.இப்படி நிறைய படித்து படித்து புளித்துவிட்டது

  • RM -

    EVM machine வச்சு இப்ப உங்க கட்சி ஆட்களே வெளிப்படையா மக்கள் மத்தியில் ஒத்துகிட்டாங்க, எந்த பட்டன் EVM ல போட்டாலும் தாமரைக்கு ஓட்டுவிழும்னு.வாழ்க ஜனநாயகம்!.Digital கிராமம் அதைநிர்வகிக்க கார்ப்போரேட்டுகள். ஏற்கனவே பேங்க் டஜிட்டல்னு தொட்டாகாசு,சரவீஸ்சார்ஜ்.ஏழை நடூத்தர மக்களின் அடிப்படைதேவை, அவர்கள் மேல் சுமத்தப்படூம் அநியாய வரிச்சுமை பற்றி எந்த திட்டம் போடுமுன் சிந்திக்கமாட்டீங்களா?.உங்களுக்கு கார்பரேட்டூகள் நலன் மடடும்தான் முக்கியமா?

  • Balamurali A -

    மாட்டுவண்டி கிராமங்கள் எப்போதே மலையேறி விட்டன. இப்போ எல்லா கிராமங்களிலும் செல்போன் கடைகள் உள்ளன. இப்போது நகரங்களில் வாழ்வோர்க்கும் கிராமங்களில் வாழ்வோர்க்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை!

  • கருத்து கந்தசாமி - தாம்பரம், சென்னை,இந்தியா

    எங்களுக்கு டிஜிட்டல் இந்தியா வேண்டாம் ......கிறீன் இந்தியாதான் (பசுமை இந்தியா) வேண்டும்

Advertisement