Advertisement

டவுட் தனபாலு

'விடுதலை' பத்திரிகை செய்தி: வட மாநில மூடப் பழக்க வழக்கங்களான, ஹோலி பண்டிகையைகொண்டாடுவது, பிள்ளையார் ஊர்வலம், கர்வா சவுக் போன்றவற்றை, வட மாநிலத்தவர் பலர், தமிழகத்தில் பரப்பி வருகின்றனர். இதனால், தமிழர்களின் கலாசாரத் தனித்தன்மை அடையாளம் இழந்து


வருகிறது.'டவுட்' தனபாலு: விட்டால், 'பொங்கல் தவிர்த்து, பிற பண்டிகைகளை கொண்டாடக் கூடாது' என, போர்வையாளர்கள் உத்தரவு போட்டு விடுவர் போலிருக்கிறதே! வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான், நாட்டின் கலாசாரம். பன்முகத் தன்மையையும் ஒருமுகமாக போற்றுவது தான் இந்தியர் இயல்பு. இதெல்லாம், குறுகிய நோக்கம் கொண்ட, தமிழ் போர்வையாளர்களுக்கு தெரியவா போகிறது என்பதே என், 'டவுட்!

பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா: தி.க., - தி.மு.க.,வினர், காங்கிரசார் மற்றும் திருமாவளவன் போன்றோர், ஹிந்துக்களையும், பகவான் கிருஷ்ணரையும் இழிவாக பேசிய போது, இப்போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டிப்போர், எங்கே சென்றிருந்தனர்?


'டவுட்' தனபாலு: அவர்கள் எங்கேயும் சென்றிருக்க மாட்டார்கள்... இங்கே தான் இருந்திருப்பர். கோவிலுக்கு சென்று ரகசியமாக வழிபட்டிருப்பர்; தேர்தலில் வெற்றி பெற, சிறப்பு யாகங்கள் வளர்த்திருப்பர்; அவற்றில் அவர்கள் பங்கேற்காமல், உடன்பிறப்புகளையும், துணைவியாரையும் அனுப்பி இருப்பர். இவர்களின் நாத்திக கொள்கைகள், தமிழகமே அறிந்தது தானே. இதில், என்ன, 'டவுட்' வேண்டியிருக்கிறது!


தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: காவல் பணியை வேலையாக இல்லாமல், தியாகமாக செய்யும் போலீசார் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். தேசம் காக்கும் நீங்களே தேசம்!


'டவுட்' தனபாலு: அடடா... நீங்கள் இப்படியும் பேசுவீர்கள்; அப்படியும் பேசுவீர்கள். நீங்கள் சொல்வது போல, தியாகப் பணி செய்யும் போலீசாரை, 'தமிழக அரசு, ஏவல் துறையாக மாற்றி விட்டது' என்பீர்கள். 'நாங்கள் பதவிக்கு வந்ததும், சில போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்' என, வெளிப்படையாக மிரட்டுவீர்கள். உங்களின், தில்லாலங்கடி வேலைகள் எங்களுக்கு தெரியாது என, நினைத்து விட்டீர்களா என்பதே என் சந்தேகம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    வொரமணி புத்தி கெட்டுப்போச்சா? அப்போ பக்ரீத் ,புனித வெள்ளி , கிருஸ்துமஸ்,கிரிக்கெட் , கார்கள் , இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் என்று எல்லாம் தமிழகத்துக்கு வெளியில் இருந்து வந்தது தான் ,ஒதுக்கி செல்லேன் வொரமணி அறிவற்ற மனிதர்களுக்கு மட்டும்தான் யோசிக்கிற தன்மை இருக்காது என்று நிரூபிக்கிறார்

Advertisement