Advertisement

அடிச்சு ஊத்தணும் மழைக்கு ஏங்கும் கான்ட்ராக்டர்கள்!

'அடிச்சு ஊத்தணும்' மழைக்கு ஏங்கும் கான்ட்ராக்டர்கள்!

''நாம, போன வாரம் பேசினதுக்கு நல்ல பலன் கிடைச்சிருக்குங்க...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், அந்தோணிசாமி.''விளக்கமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தீபாவளிக்கு விடுமுறை கம்மியா இருக்கிறதால, அம்பத்துார், ஆவடி பகுதிகள்ல, ராத்திரி, 10:00 மணிக்கு பிறகும், 'பார்'களை திறந்து வியாபாரம் பண்ணிக்கலாம்... போலீசுக்கு குடுக்க வேண்டியதை குடுத்துரணும்னு பேசினோமே...''இதைப் படிச்ச ஒரு சில நாட்கள்லயே, கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமையில, தனிப்படை போலீசார் களத்துல இறங்கிட்டாங்க... அம்பத்துார், ஆவடி, கொரட்டூர் பகுதிகள்ல, 27 டாஸ்மாக் பார்கள்ல அதிகாலை, 5:00 மணியில இருந்து, மதியம், 12:00 மணி வரைக்கும், அதிரடி, 'ரெய்டு' நடத்தினாங்க...''இதுல, 35க்கும் மேற்பட்ட, 'சரக்கு' வியாபாரிகள் சிக்குனாங்க... பார்கள்ல இருந்து, 3,000 மது பாட்டில்கள், 2.30 லட்சம் ரூபாயை பறிமுதல் செஞ்சிருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.''இந்த அதிரடி தொடர்ந்தா நன்னாஇருக்கும்...'' என்ற குப்பண்ணா, ''படம் பார்க்க வந்தவாளை, ஏமாத்திட்டார் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்.''யாரைச் சொல்றீங்க...'' என விசாரித்தார், அந்தோணிசாமி.''நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக போயிருந்த ஸ்டாலின், துாத்துக்குடியில தங்கிஇருந்தார் ஓய்... அப்ப, அங்க இருந்த ஒரு தியேட்டருக்கு போய், அசுரன் படத்தை பார்த்தாரோல்லியோ...''அந்த தியேட்டர்ல, 'பாக்ஸ்'ல மட்டும் தான், 'ஏசி' வசதி இருந்திருக்கு... மற்ற ரசிகர்கள் யாரும் வந்துடக் கூடாதுன்னு, மொத்த பாக்ஸ் டிக்கெட்டுகளையும், தி.மு.க.,வினரே வாங்கினுட்டா... இதனால, படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாந்து, வீட்டுக்கு திரும்பி போயிட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''மூச்சுக்கு முன்னுாறு தரம், மக்கள் தொண்டன், மக்கள் தொண்டன்னு வாய் கிழிய பேசுறாங்க... அந்த சாதாரண மக்களோட, ரெண்டு மணி நேரம் உட்கார்ந்து, ஒரு படம் பார்த்தா என்ன குறைஞ்சு போயிடுவாங்களாம்...'' என, அலுத்துக் கொண்டார், அன்வர்பாய்.உடனே, ''கடவுளே, மழை நல்லா அடிச்சு ஊத்தணும்...'' என, திடீரென கன்னத்தில் போட்டுக் கொண்டார் அண்ணாச்சி.''மழை தான், எல்லா பக்கமும் செழிப்பா பெய்யுதுங்களே...'' என்றார், அந்தோணிசாமி.''நான் இப்படி வேண்டலை... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்கள்ல, மழை முன்னெச்சரிக்கை பணிகளை செய்யிறதுக்கு, அரசு, 8 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கு வே...''இந்த நிதியில, சென்னையில, அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகள் மற்றும் கால்வாய்கள்ல அடைப்பு எடுக்கற வேலைகள் ஒரு மாசமா நடந்துட்டு இருக்கு... மழை அடிச்சு பெய்ஞ்சா, சேறும், சகதியும், வெள்ளத்துல, கடலுக்குள்ள அடிச்சிட்டு போயிடுமுல்லா...''பணிகளை எடுத்த கான்ட்ராக்டர்கள், 40 சதவீதம் கமிஷன் கொடுத்து, லாபமும் பார்க்கணும்கிறதால, ஏனோதானோன்னு தான் பணிகளை செய்யிதாவ... அதனால, மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டினா, அவங்க வேலை சுலபமாகிடும்னு, இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Kalyanaraman -

  தூர் வாருதல் அடைப்பு எடுத்தல் போன்ற பணிகளை மழைக்காலத்துக்கு முன்பே செய்யக்கூடாதா? மழை வரும்போது அந்தப் பணிகளுக்கு காண்ட்ராக்ட் விட்டு ஆரம்பிக்கும் அரசும் அதிகாரிகளும் ஊழல் செய்ய ஏதுவான காலம் என்று ஆரம்பிக்கிறார்களா?

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  சுடலையுடன் படம் பார்க்க ரசிகர்கள் விரும்புவதில்லை.. காரணம் சினிமா மற்றும் நேரிலும் காமெடியை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தால் வயிறு புண்ணாகிவிடாதா?

 • A R J U N - PHOENIX ....ARIZONA..,யூ.எஸ்.ஏ

  ......அவங்க வேலை சுலபமாகிடும்னு, இஷ்ட தெய்வங்களை ..மழை வேண்டி பிரார்த்தனை செய்துதான் பார்த்திருக்கிறோம்,இது என்ன புதுசா,எதுல தான் லாபம் பாக்கணும்னு விவஸ்தை இல்லாமல் போய்விட்டது

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  வருண பகவானுக்கு கான்டராக்டர்கள் ஏதாவது பங்கு கொடுப்பார்களா?

Advertisement