Advertisement

தியானமே ஒருநிலைப்படுத்தும் ஆயுதம்

சிவகங்கை: மனிதன் மனதில் தினமும் உருவாகும் 70 ஆயிரம் புதிய எண்ணங்களால் மனம் சிதறாமல் இருக்க, அரசு பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் மனதை தியானம் மூலம் ஒருநிலை படுத்தி, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க புதிய யுக்தியை கடைபிடித்து வருகின்றனர்.

விஞ்ஞான வளர்ச்சியால் பள்ளி புத்தகத்தை சுமந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, அலைபேசியை சுமக்கும் காலம் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் பின்னடைவு ஏற்படுகிறது.இதை தவிர்த்து, மாணவர்களை தியானம் மூலம் ஒருநிலைப்படுத்திதேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்ய, 'ஹார்ட்புல்நெஸ்' தியான பயிற்சி மையம் சார்பில் சிவகங்கை மாவட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தியான பயிற்சி அளிக்க முன் வந்துள்ளனர்.

முதற் கட்டமாக பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு பயிற்சியை துவக்கியுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் தொடர்ந்து 3 நாட்கள் பயிற்சி அளித்து, மனதளவில் மாணவர்களை ஒருநிலைபடுத்துகின்றனர்.மாற்று சிந்தனை மறக்கும் மாணவர்கள்: மாணவர்கள் மனதில் உள்ள மாற்று சிந்தனைகளை களைந்து, தேர்வுக்கு தயாராகும் மனநிலைக்கு மாற்றி வருகின்றனர்.


தியானத்தின் போது அமைதியாக அமர்ந்து கண்களை மென்மையாக மூடவும். கால்விரல்களை மென்மையாக அசைத்து தளர செய்யவும். இதுபோன்று பாதம் முதல் தலை வரை தியானம் மூலம் பயிற்சி அளித்து, புதிய ரத்த ஓட்டத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இப்பயிற்சியால் மாற்று சிந்தனைகளை மறந்து, படிப்பில் கவனம் செலுத்தும் நிலைக்கு வந்துவிட்டோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.

தினமும் 70 ஆயிரம் எண்ண ஓட்டம்:



தியான பயிற்சி மைய மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.குமார் கூறியதாவது: மாணவர்களிடம் மன அழுத்தத்தைகுறைப்பதே பயிற்சியின் நோக்கம். ஆய்வுப்படி மனிதருக்கு தினமும் 60 ஆயிரம் முதல் 70ஆயிரம் புதிய சிந்தனை உருவாகின்றன.இவை மனிதரை மாற்றுப்பாதைக்கு அழைத்து செல்வதை, தவிர்க்கவே, வளரும் மாணவர்களுக்கு இப்பயிற்சிஅளிக்கிறோம்.இதன் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தி, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவர். இப்பயிற்சியை சேவை நோக்குடன் நடத்துகிறோம், என்றார்.தொடர்பு கொள்ள 92452 60970.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement