Advertisement

ஓட்டல் குப்பையை எடுக்க தடை: திருச்சியை பின்பற்றுமா சென்னை?

திருச்சி: ''டிச., 1ம் தேதி முதல், ஓட்டலில் குப்பை எடுக்க மாட்டோம்,'' என, திருச்சி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருச்சி மாநகராட்சி நிர்வாகம், 'பிளாஸ்டிக் குப்பைகளை தனியாகவும், மற்ற குப்பைகளை தனியாகவும் பிரித்துக் கொடுக்க வேண்டும்' என அறிவுறுத்தி வருகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், அக்கறையின்மையாலும், அதை முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வர முடியவில்லை. இதனால், திருச்சி மாநகராட்சி நிர்வாகம், குப்பைகளை சேகரிப்பதில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து, புதிதாக பொறுப்பேற்ற, திருச்சி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் கூறியதாவது:மாநகர பகுதியை தூய் மைப்படுத்தும் பணியை, வீட்டில் இருந்தே துவங்க வேண்டும். அதற்காக, பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.மாநகராட்சி பகுதியில், தினமும், 320 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவற்றில், 30 சதவீதம், பெரிய ஓட்டல்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்படுகின்றன. டிசம்பர், 1 முதல், இந்த குப்பையை எடுக்க, மாநகராட்சி லாரிகள் அனுப்பப்பட மாட்டாது. அந்தந்த நிறுவனங்களில் சேரும் குப்பையை, அதே வளாகத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், உரமாக்கி கொள்ள வேண்டும். தினமும், 100 கிலோவுக்கு மேல் குப்பை சேரும் நிறுவனங்களுக்கு, இந்த நடைமுறை பொருந்தும்.இவ்வாறு, அவர் கூறினார். 'இதே நடைமுறையை, சென்னை மாநகராட்சியும் பின்பற்ற வேண்டும்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement