Advertisement

சிறப்பு பள்ளியில் முப்பெரும் விழா

திருச்சி: திருச்சியில், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, எலைட் சிறப்பு பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்பு தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும் வகையிலும், சிறுவர், சிறுமியர் இருவரும் சேர்ந்து விளையாடும் வகையிலும் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளித்து போட்டி நடத்தப்பட்டது. பல்லாங்குழி, பரமபதம், சதுரங்க விளையாட்டு, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு, பரிசு, பாராட்டு சான்றிதழை, திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் வழங்கினார். திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க செயலாளர் மாரி கண்ணன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement