Advertisement

உறுப்பினர்களான பள்ளி மாணவர்கள்

திருச்சி: திருச்சி, புத்தூர் கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா நடந்தது. தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா, புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தூர் கிளை நூலக நூலகர் தேவகி பேசுகையில், ''ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் சிறந்த குடிமகனாக திகழ, பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி, மாணவ மாணவியர் தேவையான நூல்களை எடுத்து படிக்கலாம். அதற்கு நூலகத்தில் உறுப்பினராக வேண்டும். கிளை நூலகத்தில் உறுப்பினராக சேர்வதற்கு ஆதார் அட்டை நகல், ஒரு புத்தகத்திற்கு காப்புத் தொகை, 20 ரூபாய், ஆண்டு சந்தா, 10 ரூபாய் செலுத்த வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, தென்னூர் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement