Advertisement

துறை தலைவர், டார்ச்சர்: மாணவி தற்கொலை முயற்சி

திருச்சி: துறை தலைவர் மற்றும் பேராசிரியை, 'டார்ச்சர்' காரணமாக, பாரதிதாசன் பல்கலை மாணவி, தற்கொலைக்கு முயன்றது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி மகள் ஜெனிபர், 22; திருச்சி பாரதிதாசன் பல்கலை காஜாமலை வளாகத்தில், விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு முதுகலை மண்ணியியல் பிரிவில் படித்து வருகிறார்.இவர், நேற்று காலை வகுப்புக்கு செல்லவில்லை. தோழியர் கேட்ட போது, 'உடல்நிலை சரியில்லை' எனக் கூறிஉள்ளார். மதியம், சக மாணவியர் வந்து பார்த்தபோது, ஜெனிபர் மயங்கி கிடந்துள்ளார். அருகில் பினாயில் பாட்டில் இருந்துள்ளது. இதனால், ஜெனிபர் தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. மாணவியை, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜெனிபர் அறையில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில், தன் துறைத் தலைவர் சக்திவேல் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை முடிவை எடுத்ததாக எழுதியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு, தன் தோழியர் சிலர், துறை தலைவரால் துன்புறுத்தப்பட்டதாகவும் எழுதியுள்ளார். தவிர, அதே துறையில் பணியாற்றும் அகிலா என்ற பேராசிரியையும், துறைத் தலைவருடன் சேர்ந்து, தன்னை டார்ச்சர் செய்ததாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement