dinamalar telegram
Advertisement

சட்டசபை நுாலக ஊழியர்களுக்கு அமைச்சர், டோஸ்!

Share
Tamil News
''இன்னும் தீபாவளி பணம் வந்து சேரலைன்னு புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், குப்பண்ணா.

''தீபாவளி முடிஞ்சு, பொங்கலே வரப் போவுதே...'' என, சிரித்தார் அண்ணாச்சி.

''அ.தி.மு.க., தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு, வருஷா வருஷம், தீபாவளிக்கு, பண்டிகை கால சிறப்பு நிதி குடுப்பா... இப்ப, 344 பேச்சாளர்கள் இருக்கா ஓய்... ''இதுல, முதன்மை பேச்சாளர்களுக்கு, 50 ஆயிரம், அடுத்த நிலையில இருக்கறவாளுக்கு, 25 ஆயிரம், கடைசியா, 10 ஆயிரம் ரூபாய்னு, மூணு விதமா பிரிச்சு குடுப்பா... போன வருஷ தீபாவளிக்கு, நிதி வழங்கற பொறுப்பை, முன்னாள் பெண் அமைச்சர் ஒருத்தரிடம் குடுத்திருந்தா... அப்ப, பலருக்கு முறையா பணம் போய் சேரலைன்னு புகார்கள் வந்துடுத்து ஓய்...''அதனால, இந்த வருஷம், பணத்தை, அவாவா வங்கிக் கணக்குல போட்டுடுங்கோன்னு முதல்வர் சொல்லிட்டார்... ஆனா, தீபாவளி முடிஞ்சு, மூணு வாரத்துக்கு மேலாகியும், யாருக்கும் இன்னும் பணம் போய் சேரலை... பாவம், அவாள்லாம் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''ஊழியர்கள் சம்பளத்துல கை வச்சிடுறாங்க...'' என, அடுத்த மேட்டருக்கு சென்றார், அந்தோணிசாமி.
''எந்தத் துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பர்பாய்.
''சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவுல, விலங்குகள் பராமரிப்பு துவங்கி பல்வேறு பணிகளுக்கும், ஒப்பந்த ஊழியர்களை நியமிச்சிருக்காங்க... இவங்களுக்குரிய மாதச் சம்பளத்தை, ஒப்பந்ததாரர்களுக்கு, 'செக்'கா குடுத்துடுறாங்க...''செக்கை பணமா மாத்துற அவங்க, தங்களது பங்கு போக, வனச்சரகர்களுக்கும் கணிசமா கமிஷன் தந்துட்டு, மீத பணத்தை தான், ஒப்பந்த ஊழியர்களுக்கு தராங்க... இந்த வகையில, வனச்சரகர்கள் மாசம், 30 முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை கல்லா கட்டுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''மிசா விவகாரத்துல, நுாலக ஊழியர்களும் சிக்கி தவிக்காவ வே...'' என, கடைசி தகவலுக்கு தாவினார், அண்ணாச்சி. ''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''ஸ்டாலின், மிசா சட்டத்துல கைதாகலைன்னு, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் சொல்ல, அதுக்கு, தி.மு.க., தரப்புல கண்டனம் தெரிவிச்சிட்டு இருக்காங்கல்லா...''மிசா சிறைக் கொடுமைகள் பத்தி, விசாரணை நடத்துன, ஓய்வு பெற்ற நீதிபதி இஸ்மாயில் கமிஷன் அறிக்கையின் புத்தகம், சட்டசபை நுாலகத்துல இருக்கு வே... ''இங்க ஸ்டாலின் தரப்பு போய், அந்த புத்தகத்தை வாங்கிட்டு போயிருக்கு... அதே புத்தகத்தை, அமைச்சர் பாண்டியராஜனும் கேட்டிருக்காரு வே...''அப்ப தான், புத்தகத்தை ஸ்டாலின் தரப்பு வாங்கிட்டு போனது தெரிஞ்சிருக்கு... 'எப்படி புத்தகத்தை கொடுத்து அனுப்பலாம்'னு அமைச்சர் தரப்புல, நுாலக ஊழியர்கள் மூணு பேருக்கு, 'டோஸ்' விழுந்திருக்கு வே... மூணு பேருல, முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் உறவினரும் ஒருத்தராம்...'' என, முடித்தார் அண்ணாச்சி.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.

தி.மு.க.,விடம் ஒரு மேயர், 'சீட்' கேட்கும் வைகோ!பெஞ்ச் பெரியவர்கள் மத்தியில், தாமதமாக ஆஜரான அந்தோணிசாமி, ''சலுகையை பறிச்சுட்டாங்களேன்னு புலம்புறாங்க...'' என, பட்டென மேட்டருக்கு வந்தார்.
''யாரோட சலுகையை, யார் ஓய் பறிச்சது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''உள்ளாட்சி தேர்தல்ல போட்டியிட, கட்சிகள் சார்புல, விருப்ப மனு தாக்கல் பண்ணிட்டு இருக்காங்களே... வழக்கமா, எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினருக்கு, விண்ணப்பக் கட்டணத்துல, 50 சதவீதம் சலுகை குடுப்பாங்க...''இந்த முறை, அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும், எஸ்.சி.,- - எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணச் சலுகை கொடுக்கலைங்க... தி.மு.க.,வுல, கட்டணச் சலுகை குடுத்திருந்தாலும், விண்ணப்பக் கட்டணத்தை, உயர்த்திட்டாங்க... இதனால, எல்லா கட்சிக்காரங்களுமே அதிருப்தியில தான் இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.'
'சொந்தப் பெயர்ல கணக்கு துவங்கி, 5 லட்சம் ரூபாயை அமுக்கிட்டாரு வே...'' என, இரண்டாவது தகவலுக்குள், தடம் பதித்தார் அண்ணாச்சி.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.' 'காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துல, குண்ணவாக்கம்னு ஒரு ஊராட்சி இருக்கு... இதன் செயலரா இருக்கிறவர், தன் சொந்த பெயர்ல, 2017ல ஒரு வங்கிக் கணக்கை துவங்குனாரு வே...''ஊராட்சிக்கு வர்ற தனியார் தொழிற்சாலைகளின் பல வித வரிகளுக்கான செக்குகளை எல்லாம், தன் வங்கிக் கணக்குல போட்டு, 5 லட்சம் ரூபாய் வரைக்கும் அள்ளிட்டாரு... இதை, பி.டி.ஓ., ஒருத்தர் கண்டுபிடிச்சு, பணத்தை திரும்பக் கட்டும்படி உத்தரவு போட்டிருக்காரு வே...''இது வெளியே தெரிஞ்சா, ஊராட்சி செயலர் ஓய்வுல போறது பாதிக்கும்னு, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் ரெண்டு பேர், பி.டி.ஓ.,வை சமாதானப்படுத்திட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
மொபைல் போனில் பேசியபடியே வந்த அன்வர்பாய், ''சத்தியமூர்த்தி பயப்படாதீங்க... சுரேஷும், நாகராஜும், எல்லாத்தையும் பார்த்துக்கிடுவாங்க...'' எனக் கூறி, 'கட்' செய்து, ''ஈரோடை எங்களுக்கு தந்துடுங்கன்னு கேட்டுட்டு போயிருக்காரு பா...'' என, கடைசி தகவலுக்கு வந்தார்.''மேயர், 'சீட்டை' சொல்றீரா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.'
'ஆமாம்... சமீபத்துல, ஸ்டாலினை அறிவாலயத்துல, வைகோ பார்த்து பேசினாருல்ல... அப்ப, உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமா, அரை மணி நேரம் பேசியிருக்காரு பா...''அப்ப, 'திருநெல்வேலி அல்லது ஈரோடு மேயர் சீட்டை, ம.தி.மு.க.,வுக்கு தரணும்... நான் இப்ப கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு போறேன்... போயிட்டு வந்ததும், உங்களிடம் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்'னு சொல்லிட்டு போயிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.அரட்டை முடியவும், பெரியவர்கள் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement