கிணற்றில் போட்ட கல்லாய் போன கோயில் பூஜாரி கொலை வழக்கு
கம்பம் : சுருளி அருவி பூதநாராயணர் கோயில் பூஜாரி கொலை வழக்கில், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சுருளி அருவியில் பழமையும், புராதானமுமான பூதநாராயணர் கோயில் உள்ளது.அருவிக்கு வரும் பக்தர்கள் குளித்து விட்டு, இங்கு சுவாமி தரிசனம் செய்வர். ஆடி, தை அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தபின், இங்கு தான் மோட்சதீபம் ஏறறுவர். இந்த கோயிலில் இருந்த பூஜாரி மல்லையன் 70, மே 3ல் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஏழுமாதமாகியும் இன்றுவரை இந்த கொலை வழக்கில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. புலனாய்விலும் முன்னேற்றம் இல்லை.
இது மட்டுமல்லாமல் பல குற்ற வழக்குகளில் குறிப்பாக குமுளி மலைப்பாதையில் ஓடும் லாரியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 16 லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் வழக்கு, உத்தமபாளையம் முல்லையாற்றில் உடல் கண்டெடுக்கப்பட்ட கம்பம் சிவகுருநாதன் சந்தேக மரணம் என பல வழக்குகள் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளன. புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி., சாய்சரண்தேஜஸ்வி, குற்ற வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுருளி அருவியில் பழமையும், புராதானமுமான பூதநாராயணர் கோயில் உள்ளது.அருவிக்கு வரும் பக்தர்கள் குளித்து விட்டு, இங்கு சுவாமி தரிசனம் செய்வர். ஆடி, தை அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தபின், இங்கு தான் மோட்சதீபம் ஏறறுவர். இந்த கோயிலில் இருந்த பூஜாரி மல்லையன் 70, மே 3ல் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஏழுமாதமாகியும் இன்றுவரை இந்த கொலை வழக்கில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. புலனாய்விலும் முன்னேற்றம் இல்லை.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!