dinamalar telegram
Advertisement

நிலக்கடலை சாகுபடிக்கு புத்துயிர் கிடைக்குமா

Share
கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் நிலக்கடலை சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

இங்கு நிலக்கடலை சாகுபடி 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மேற்கொள்ளப்பட்டது. லோயர்கேம்ப், கூடலுார், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வரை மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டது. எண்ணெய்க்கு மட்டுமல்லாது, உணவு பொருளாகவும் பயன்படுகிறது. கடலைச் செடி மாட்டுத் தீவனமாக பயன்படும். அதிக புரோட்டீன் இருப்பதால் கூடுதல் பால் உற்பத்தியானது.

இந்நிலையில் சாகுபடி பரப்பு கடந்த 10 ஆண்டுகளில் மளமளவென சரியத் துவங்கியது. விதைக்கடலை விலை, உற்பத்தியாகும் நிலக்கடலைக்கு கட்டுபடியான விலை கிடைக்காதது, காட்டுப்பன்றிகள் தொல்லை என இதற்கான காரணங்கள் நீண்டன. இதனால் விவசாயிகள் துவரை,மொச்சை, குத்தவரை, சூரியகாந்தி, தட்டைப்பயறு உள்ளிட்ட மாற்றுப்பயிருக்கு சென்றனர். எனவே நிலக்கடலை சாகுபடிக்கு மீண்டும் புத்துயிர் கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளனர்.வேளாண் துறையினரிடம் கேட்டதற்கு, நிலக்கடலை சாகுபடி பரப்பு குறைந்துள்ளது உண்மை தான்.

அதன் விதைக்கு மானியம் தருகிறோம். மற்ற பயிர்கள் மூலம் நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் நிலக்கடலையை தவிர்க்க வாய்ப்புள்ளது,'என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement