dinamalar telegram
Advertisement

இறந்தவர் வங்கிக் கணக்கில் ரூ. 25 லட்சம் சுருட்டிய பணியாளர்கள் இருவர், சஸ்பெண்ட்

Share
திருச்சி: இறந்தவர் கணக்கில் இருந்து, 25 லட்சம் ரூபாய் சுருட்டிய, வங்கிப் பணியாளர்கள், இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, ஜமால் முகமது கல்லூரியில் உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில், எமிலிசோலா என்பவர், தன் சேமிப்பு கணக்கில், 30 லட்சம் ரூபாய்க்கு மேல், 'டிபாசிட்' செய்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், எமிலிசோலா இறந்தார். அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு, உறவினர்கள் யாரும் சொந்தம் கொண்டாடவில்லை.இதனால், அந்த வங்கிக் கிளை மேலாளராக இருந்த, ஷேக் மொய்தீன், 58, உதவி மேலாளராக இருந்த, சின்னத்துரை, 47, ஆகியோர், எமிலிசோலாவின் வங்கிக் கணக்கை புதுப்பித்தனர். எமிலிசோலாவின் கையெழுத்தை, போலியாக போட்டு, புதிதாக, ஏ.டி.எம்., அட்டை வாங்கினர். அந்த அட்டையை பயன்படுத்தி, எமிலிசோலாவின் கணக்கில் இருந்து, பல கட்டமாக, 25 லட்சம் ரூபாயை கையாடல் செய்தனர். வாடிக்கையாளர்களின் டிபாசிட் கணக்குகளை, அதிகாரிகள் தணிக்கை செய்த போது, எமிலிசோலாவின் பணத்தை, வங்கிப் பணியாளர்களே கையாடல் செய்தது, கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து, விசாரணை நடத்திய அதிகாரிகள், ஷேக் மொய்தீன், சின்னத்துரை ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்தனர்.மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் பிரேம் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார், ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement