dinamalar telegram
Advertisement

லஞ்ச எஸ்.ஐ.,யை விடுவிக்க ரூ.10 லட்சம் வாங்கி மோசடி

Share
திருச்சி: லஞ்ச வழக்கில் கைதான, எஸ்.ஐ., மனைவியிடம், 10 லட்சம் ரூபாய் வாங்கி, மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை, ஏ.சி.டி., நகரைச் சேர்ந்த ரகுபதி, வாங்கல் பகுதியில், எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். ஜன., 31ம் தேதி, லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட ரகுபதி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள, ஆலம்பாடியைச் சேர்ந்த சாந்தப்பன், 45, என்பவர், ரகுபதியின் மனைவி லதாவிடம், மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அப்போது, 'உயர் போலீஸ் அதிகாரி களை, எனக்கு நன்கு தெரியும். அவர்களிடம் பேசி, ரகுபதியை விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன். அதற்கு, 10 லட்சம் ரூபாய் செலவாகும்' என, கூறியுள்ளார். இதை நம்பிய லதா, பிப்., 27ல், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே, சாந்தப்பனை சந்தித்து, 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.ஆனால், ரகுபதியை விடுவிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லதா, மெபைல்போனில், சாந்தப்பனை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.இதனால், அதிர்ச்சிஅடைந்த லதா, 10 லட்சம் ரூபாய் வாங்கி, ஏமாற்றிய, சாந்தப்பன் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார். இது தொடர்பாக, மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞான சேகர், விசாரணை நடத்தி, சாந்தப்பனை நேற்று கைது செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement