dinamalar telegram
Advertisement

தேன்கனிக்கோட்டைக்கு இடம் பெயர்ந்த யானைகளால் பயிர்கள் நாசம்

Share
ஓசூர்: கர்நாடகா மாநில வனப்பகுதியில் இருந்து, தமிழக எல்லையான ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு சமீபத்தில், 150க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்தன. இவற்றில், 35க்கும் மேற்பட்ட யானைகள் தனியாக பிரிந்து, அஞ்செட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட, குந்துக்கோட்டை வனப் பகுதிக்கு சென்றன. அங்கிருந்து, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனூர் மற்றும் தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதிக்கு நேற்று அதிகாலை இடம் பெயர்ந்தன. நொகனூர் காப்புக்காட்டில், 22க்கும் மேற்பட்ட யானைகளும், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், 13க்கும் மேற்பட்ட யானைகளும் உள்ளன. குந்துக்கோட்டையில் இருந்து, தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதிக்கு யானைகள் இடம் பெயரும்போது, நொகனூர் அருகே, விவசாயி மஞ்சு என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டம், ஆனந்த் என்பவருக்கு சொந்தமான முட்டைகோஸ், ஜெகதீஸ் என்பவரது மக்காள சோள தோட்டங்களை நாசம் செய்தன. இவற்றை, தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் பார்வையிட்டனர். தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில் தற்போது, 35க்கும் மேற்பட்ட யானைகள் உள்ள நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில், ராகி பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்த நேரத்தில், யானைகள் தேன்கனிக்கோட்டைக்கு இடம் பெயர்ந்துள்ளதால், ராகி பயிர்கள் நாசமாக அதிக வாய்ப்புள்ளது. அதனால், கூலியாட்களை அழைத்து வந்து, உடனடியாக, ராகி பயிர்களை பறிக்க வேண்டும் என, வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement