dinamalar telegram
Advertisement

லாட்டரி சீட்டு விற்ற இருவருக்கு காப்பு

Share
ஓசூர்: ஓசூர், பாரூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர். பாரூர் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராஜா தலைமையிலான போலீசார், அரசம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்ற, அரசம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி முனிராஜ், 55, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 5 லாட்டரி சீட்டு மற்றும் 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஓசூர், சிப்காட் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., சங்கர் தலைமையிலான போலீசார், தர்கா பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற, மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த ராஜப்பா, 40, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 24 லாட்டரி சீட்டு மற்றும், 3,040 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement