Advertisement

பெண்ணை மிரட்டிய தொழிலாளி கைது

கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே, பெண்ணை மிரட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சானிப்பட்டியை சேர்ந்த முருகன் மனைவி சாந்தி, 30. அங்கன்வாடி சமையலர்; கணவன் இறந்து விட்டதால், தனியாக வாழ்ந்து வருகிறார்; இவருக்கும், மாதம்பதி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ரகு, 34, என்பவருக்கும் இடையே, தொடர்பு இருந்து வந்தது. அப்போது சாந்திக்கு, ரகு பணம் கொடுத்துள்ளார். இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்ட நிலையில், பணத்தை தருமாறு கேட்டு, சாந்தியிடம் கடந்த, 13ல், தகராறு செய்த ரகு மிரட்டல் விடுத்தார். இது குறித்து நேற்று முன்தினம், மத்தூர் போலீசில் சாந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரகுவை கைது செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement