Advertisement

வீட்டின் முன் நிறுத்திய பைக் திருட்டு

ஓசூர்: ஓசூரில், வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஓசூர், குமுதேப்பள்ளி பி.கே.ஆர்., நகரை சேர்ந்தவர் இம்ரான், 27. இவர், கடந்த மாதம், 29ல், தனது வீட்டின் முன், ஹோண்டா டியோ பைக்கை நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் காலையில் பார்த்த போது பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றுள்ளனர். இது குறித்து, இம்ரான், நேற்று முன்தினம் ஹட்கோ போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைக்கை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement