dinamalar telegram
Advertisement

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Share
கிருஷ்ணகிரி: கந்திக்குப்பம் அருகே, மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் ஸ்டேஷன் எஸ்.ஐ., செந்தில்குமார் தலைமையிலான போலீசார், வரட்டனப்பள்ளி- தேசுப்பள்ளி இடையே உள்ள வரட்டனப்பள்ளி ஏரி அருகே, நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்த போது, மணல் கடத்தி செல்வது தெரிந்தது. ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், பர்கூர் அடுத்த கீழ்பூங்குருத்தியை சேர்ந்த டிரைவர் கேசவன், 26, என்பவரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement