Advertisement

ரேஷன் பொருட்கள் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே, ரேஷன் பொருட்கள் கேட்டு, பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சாலிவாரம் கிராமத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதில், சுந்தரம் என்பவர் விற்பனையாளராக உள்ளார்; சரியாக ரேஷன் கடையை திறக்காததால், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை என கூறி, பொதுமக்கள் நேற்று சாலிவாரம் கிராமத்தில் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக செல்ல வேண்டிய, 41ம் எண் அரசு டவுன் பஸ் செல்ல முடியவில்லை. தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரேஷன் கடை விற்பனையாளரை மாற்றி, சரியாக பொருட்கள் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. மக்களின் கோரிக்கை மீது, நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் மறியலால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement