Advertisement

மூன்று கடைகளில் திருடிய இரண்டு வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி: மத்தூரில், மூன்று கடைகளில் திருடிய வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கே.புதூரை சேர்ந்தவர் பெருமாள், 32. மத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த, 13 இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 8,000 ரூபாயை திருடி சென்றனர். மத்தூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கணேஷ், 35, என்பவரது செருப்பு கடைக்குள் கடந்த, 14 இரவு புகுந்த மர்ம நபர்கள், 4,000 ரூபாய் மதிப்புள்ள, 30 ஜோடி செருப்புகளை திருடி சென்றனர். மத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மத்தூர் பதியை சேர்ந்த ரபீக், 27, என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த, 14 இரவு பெட்டிக்கடையை பூட்டி சென்ற ரபிக், நேற்று முன்தினம் காலையில் வந்து பார்த்த போது, 5,000 ரூபாய் மதிப்புள்ள, ஐந்து கிலோ எடை கல் திருட்டு போயிருந்தது. இது குறித்து, மத்தூர் போலீசில் தனித்தனியாக புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில், சானிப்பட்டி அருகே உள்ள, ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், 20, மத்தூர் செட்டியப்பன் நகரை சேர்ந்த முகமது வாசிம், 20, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement