தாழ்வாக செல்லும் உயர்மின் அழுத்த கம்பிகளால் ஆபத்து
ஊத்தங்கரை: ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகம் பின்புறம், உயர்மின் அழுத்த கோபுர கம்பிகள் செல்கின்றன. தரையில் நின்றவாறு உயர்மின் அழுத்த மின்கம்பிகளை தொடும் அளவிற்கு தாழ்வாக செல்கிறது. இங்கு, விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதி, அதிகமாக உள்ள நிலையில், மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும், கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், பெரிய விபத்து ஏற்பட்டு, உயிர்பலி நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, உயிர்பலி நடக்கும் முன், மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் உயர்மின் அழுத்த கம்பிகளை, உயரமாக அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!