Advertisement

குழந்தைகள் தின ஓவிய போட்டி: மாணவ, மாணவியர் பங்கேற்பு

கரூர்: குழந்தைகள் தின விழா ஓவியப் போட்டிகள், கரூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட, மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 1- 5ம் வகுப்பு பிரிவில், எல்.வி.என்., பள்ளி, நான்காம் வகுப்பு மாணவி மஹதி முதலிடம்; லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி, ஐந்தாம் வகுப்பு மாணவி ரூபிகா, இரண்டாமிடம்; தன்யாஸ்ரீ, மூன்றாமிடம். ஆறு முதல், எட்டாம் வகுப்பு பிரிவில், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் கோகுலகுமார் முதலிடம்; கரூர், வெற்றி விநாயகா மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா இரண்டாமிடம்; கரூர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி கமலி, மூன்றாமிடம் பிடித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement