dinamalar telegram
Advertisement

அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Share
கரூர்: அமராவதி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று, 1,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, பாசனத்துக்காக கடந்த மாதம், 20 முதல், ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் காலை வினாடிக்கு, 750 கன அடி திறக்கப்பட்டது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 1,000 கன அடியாக உயர்த்தப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 1,050 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 72.97 அடியாக இருந்தது.

* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 15 ஆயிரத்து, 720 கன அடி வந்தது. காவிரியாற்றில், 14 ஆயிரத்து, 100 கன அடி தண்ணீரும், நான்கு கிளை வாய்க்காலில், 1,620 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


* கார்வாழி ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 20 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.90 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் வாய்க்காலில், 130 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


* கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் மயிலம்பட்டியில் மட்டும், 5 மி.மீ., மழை பெய்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement