அகழ்வாராய்ச்சி புகைப்பட கண்காட்சி
கரூர்: கரூர், பரணி பார்க் மேல்நிலை பள்ளியில், தொல்லியல் சங்கம் சார்பில் அகழ்வாராய்ச்சி சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் குழந்தைகள் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் மோகனரங்கன் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கவிதா பங்கேற்றார். 'கீழடி, தமிழரின் மேன்மைமிகு நகர நாகரிகம்' என்ற தலைப்பில் கீழடி அகழ்வாராய்ச்சி மாதிரி சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடந்தது. இதில், 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழி எழுத்து வடிவத்தில் பார்வையாளர்களின் பெயர்கள் எழுதித்தரப்பட்டன. செயலாளர் பத்மாவதி மோகனரங்கன், பள்ளி முதல்வர் ராமசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!