ரூ.4,750 கோடி பயிர் கடன் வழங்கல்: விழாவில் அமைச்சர் தகவல்
கரூர்: ''கூட்டுறவு சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு, 4,750 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
கரூரில், அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. 992 பேருக்கு, 5.19 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கி பேசியதாவது: கடந்த, 2019 - 20ம் ஆண்டிற்கு மட்டும், தமிழகளவில், 10 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இந்தாண்டு, ஏழு மாதங்களில் மட்டும், 4,750 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 84 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், 4,172 மெட்ரிக் டன் உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், 39 மெட்ரிக் டன் விதைகள், 13.80 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி திட்டத்தில் மாநில அளவில், 12 லட்சத்து, 2,075 விவசாயிகளுக்கு, 5,318.73 கோடி ரூபாய் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் மட்டும், 27 ஆயிரத்து, 939 விவசாயிகளுக்கு, 129.28 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும், 111 அம்மா மருந்தகங்கள், 179 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம், 20 சதவீத தள்ளுபடி விலையில், மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. 4,469 பொது சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் உள்ள, 81 பொது சேவை மையங்கள் மூலம், 2011 முதல் தற்போது வரை, 57 ஆயிரத்து, 16 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர், பேசினார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், எம்.எல்.ஏ., கீதா, கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!