Advertisement

டாஸ்மாக் கடைகளில் கைவரிசை காட்டியவர் கைது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் அதிகாரி போல் டிப்டாப் உடையணிந்து, டாஸ்மாக் கடையில், மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை, போலீசார் கைது செய்தனர். பள்ளபட்டி அடுத்துள்ள சூரிப்பாளி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில், நேற்று முன்தினம் டிப்டாப் உடையணிந்து வந்த ஒருவர், கடை ஊழியர்களிடம், தான் அரசு உயர் அதிகாரி எனக்கூறி, தனக்கு பணம் தருமாறு மிரட்டியுள்ளார். இதையடுத்து அங்கு பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியர்கள், டிப்டாப் ஆசாமி பற்றிய தகவலை அரவக்குறிச்சி போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார், அவரை பிடித்து விசாரனை செய்தனர். அப்போது பணம் கேட்டு மிரட்டியவர், சென்னை, அமைந்தகரை, முத்துமாரியம்மன் காலனி, கஜேந்திரன்,48, என்பது தெரிய வந்தது. கடந்த மார்ச், 21ல், அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மதுபான கடையில், ஊழியர்களை மிரட்டி, அவர்கள் வைத்திருந்த, ஒரு லட்சத்து, 14ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடி தலைமறைவானவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அரவக்குறிச்சி போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement