dinamalar telegram
Advertisement

விஷ வண்டு கடித்ததில் கூலி தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

Share
குளித்தலை: விவசாய கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்களை, விஷ வண்டு கடித்ததில், நான்கு பேர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்., ரெத்தினத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவக்குமார், 54,தெய்வானை, 55,மஞ்சுளா,43, சரோஜா, 45. இவர்கள் நேற்று காலை, 10:00 மணியளவில் விவசாய கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். வயல் பகுதியில் இருந்த மரத்தில் இருந்து பறந்து கொண்டிருந்த விஷ வண்டு, நான்கு பேரையும் கடித்தது. இதில் பெண்கள், மூவரும் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் குளித்தலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement