Advertisement

அரிவாள் வெட்டுடன் தொழிலாளி மர்மச்சாவு

குளித்தலை: குளித்தலை, அரசு மணல் கிடங்கு எதிரே, வெட்டுக் காயத்துடன், ரத்த வெள்ளத்தில் இருந்த வாலிபர் இறந்தார். குளித்தலை அடுத்த, பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்., புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி, 41; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்ப்பள்ளி அரசு மணல் கிடங்கு எதிரே, கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார். தகவலறிந்து சென்ற, '108' அவசர ஆம்புலன்ஸ் பணியாளர்கள், அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, தன் முகவரியை மட்டும் அவர் கூறியுள்ளார். வாகனத்தில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையிலும், உயிரிழந்தார். மணல் கடத்தலில் ஈடுபட்டதால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு பிரச்னையா என, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement