dinamalar telegram
Advertisement

சாலையோர முட்செடிகள்: ஓட்டுனர்கள் அவதி

Share
கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டி சாலையோரமுள்ள முட்செடிகளால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அருகே, வேங்காம்பட்டி செல்லும் தார்ச்சாலை உள்ளது. வாகன போக்குவரத்து அதிகம். சாலையின் இருபுறமும் அதிகமான முட்செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால், எதிரெதிரே வாகனங்கள் வரும் போது, முட்செடிகள் உரசி, இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. அவை சாலையில் உலா வருவதால், பாதசாரிகள் அச்சப்படுகின்றனர். இந்த பகுதியில் வளர்ந்து வரும் முட்செடிகளை முழுவதும் அகற்ற பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement