Advertisement

உள்ளாட்சி தேர்தல் சந்திக்க காங்., தயார்

சென்னை:''உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பட்சத்தில், தேர்தலுக்கு காங்கிரசும் தயாராக உள்ளது,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சென்னை, சத்தியமூர்த்தி பவனில், அவரது பேட்டி:மத்திய அரசின் தவறான கொள்கைகளை சுட்டிக்காட்டி, வரும், 30ல், டில்லியில், அகில இந்திய காங்., சார்பில், பேரணி நடைபெறுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரசைச் சேர்ந்த சிதம்பரத்தை, 89 நாட்களாக, விசாரணை கைதியாக வைத்துள்ளனர். இது, மத்திய அரசின் எதேச்சதிகார போக்கை காட்டுகிறது.உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பட்சத்தில், தமிழக காங்கிரசும், தேர்தலுக்கு தயாராகி உள்ளது. தென் பெண்ணை ஆற்றில் அணை கட்டிக் கொள்ள கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.மாநில உரிமைகளுக்காக, ஜெயலலிதாபோராடினார். ஆனால், முதல்வர் இ.பி.எஸ்., அரசு, மாநில உரிமைகளுக்கு போராடுவதை மறந்து விட்டது. இவ்வாறு அழகிரி கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • s.rajagopalan - chennai ,இந்தியா

    அவுரு எப்போதும் தயார்...தி மு க ஆதரவு இருக்கும் வரை ...இல்லாவிட்டால் இன்னொரு முதுகை தேடவேண்டும் ..அங்குதான் பிரச்னை

  • Baskar - Paris,பிரான்ஸ்

    அழகிரி அவர்களே உங்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலுக்கு ரெடியாய் இருக்கிறது என்கிறீர்கள். ஆனால் உங்களிடம் அவ்வளவு இடத்திற்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா. கூட்டணியில் என்ன ஐம்பதுக்கு ஐம்பதா. எல்லாவற்றையும் விளக்கி சொல்லுங்கள். வேட்டிகள் சட்டைகள் கிழியாமல் இருக்க பாருங்கள்.

Advertisement