dinamalar telegram
Advertisement

தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு: ராமதாஸ்

Share
சென்னை:'இலங்கை தேர்தலில், கோத்தபய வெற்றி பெற்றுள்ளதால், தமிழர்களுக்கு, தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு' என, பா.ம.க., நிறுவனர்ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக் கூடாது என, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினரோ, அது நடந்து விட்டது. தமிழினத்தின் எதிரியான, கோத்தபய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று, இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அதிபரானது, இலங்கையில் அமைதியை ஏற்படுத்த, எந்த வகையிலும் உதவாது.அதிபர் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடங்களையும், புதிய அதிபர் தமிழர்களுக்கு எதிராக ஏவ காத்திருக்கும் அடக்குமுறைகளையும் வைத்துப் பார்க்கும் போது, ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழ் ஈழம் அமைத்துத் தருவது தான், ஈழப்பிரச்னைக்கு, சிறந்த தீர்வாக அமையும்.
அதிபர் தேர்தல் முடிவுகளை, அதற்கான பொது வாக்கெடுப்பு முடிவாக கருதலாம் என்றாலும், தேவைப்பட்டால், மீண்டும் ஒரு முறை பொது வாக்கெடுப்பு நடத்தி, தனித் தமிழ் ஈழம் அமைத்துக் கொடுக்க, ஐ.நா., அமைப்பு முன் வர வேண்டும். இதற்காக, ஐ.நா., அமைப்பை, இந்தியாஉள்ளிட்ட நாடுகள் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • s.rajagopalan - chennai ,இந்தியா

    அதாவது நிரந்தர தீர்வு கிடையவே கிடையாது என்று சொல்கிறார் போல ஐயா, நீங்க , வை கோ , சீமானான் ...எல்லோரும் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டிருந்தால் இலங்கை தமிழர்கள் நிம்மதியாக வாழ்வார்கள். புதிய ஜனாதிபதி பற்றி தெரியும்லே " நெஞ்சில் ஈரமில்லாதவர்

Advertisement