Advertisement

பெண்ணையாறு பிரச்னை மந்திரி ஜெயகுமார் உறுதி

சென்னை:'பெண்ணையாறு விவகாரத்தில், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும். தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த துரைமுருகன், பங்கீடு குறித்து, தன் அனுபவத்தை கூறியுள்ளார்' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நதிநீர் பங்கீட்டு உரிமைகளில், அரசு அக்கறை காட்டுவதில்லை என, துரைமுருகன் கூறுவது விந்தையாக உள்ளது.கர்நாடக அரசு, மார்கண்டேய நதியில், அணை கட்டும் பணிகளை மேற்கொண்டதால், பணியை தடுத்து நிறுத்த, ஜூலை, 3ல், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில், திறமையான வாதங்கள் முன் வைக்கப்பட்டன.இவ்வழக்கில், 14ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, நடுவர் மன்றத்தை அமைக்க, மத்திய அரசை நான்கு வாரத்திற்குள் அணுகும்படி, தமிழக அரசுக்குஅறிவுறுத்தப்பட்டு உள்ளது.தீர்ப்பை முழுமையாக படிக்காமல், அரசியல் காரணங்களுக்காக மறைத்து கூறுவதை, துரைமுருகன் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதை, மக்கள் நன்கு அறிவர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், இன்னும் நிலையில் உள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை, அடுத்தாண்டு ஜனவரி, 10ல் நடக்க உள்ளது.பெண்ணையாறு தீர்ப்பு தொடர்பாக, சட்ட வல்லுனர்களுடன் அரசு கலந்தாலோசித்து வருகிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள், அரசால் மேற்கொள்ளப்படும். தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்ததால், 'பங்கீடு' குறித்த தன் அனுபவத்தை, துரைமுருகன் தன் அறிக்கையில் கூறியுள்ளார். தன் பங்கீடு அனுபவத்தை, வேலுார் லோக்சபா தேர்தலில் அவர் செயல்படுத்தியதால், வருமான வரித்துறை நடவடிக்கையால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.இவ்வாறு, ஜெயகுமார் கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Anandan - chennai,இந்தியா

    நல்லா பாருங்க அதிமுக அமைச்சர்கள் எப்போது எதிர்காலத்தில் பேசுவார். எப்போதுமே நாங்கள் இன்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் என்று பேசவே மாட்டார்கள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கமாட்டார்கள். எப்போது மேடை கோணல் என்ற கொள்கையை ஆரம்பித்தது இவர்கள்தான் இன்னொரு கட்சி இவர்களை காப்பி அடித்தது.

  • blocked user - blocked,மயோட்

    துகிலுரித்தல் புகழ் துறைமுருகன் உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்துவிடலாம் என்று கற்பனையில் இருக்கிறார்.

    • Anandan - chennai,இந்தியா

      உங்களுக்கெல்லாம் சந்து முனைக்கு வரசொல்பவர்கள்தான் வேண்டும்.

Advertisement