Advertisement

4 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

காரைக்குடி : மித்ராவயல் கிராமத்தில்தோட்டக்கலை சார்பில்,4 ஆயிரம் பனைமர விதைகள் நடப்பட்டது.

தற்போது, அனைத்து பகுதிகளிலும் பனைமரத்தின் நன்மைகருதி பனை விதை விதைக்கும் பணி, மாணவர்கள், சமூகஆர்வலர்கள், தோட்டக்கலை சார்பில் நடந்து வருகிறது.காரைக்குடி மித்ராவயல் பகுதியில்,தோட்டக்கலை சார்பில் 4 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டது.ரிலையன்ஸ் பவுண்டேசன், மித்ராவயல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், தஞ்சை அரசு வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய களப்பயிற்சி மாணவர்கள் கலந்துகொண்டனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் வித்யாபாரதி முன்னிலை வகித்தார். ரிலையன்ஸ் பவுண்டேசன் நிறுவன அணித்லைவர் நாகராஜன் பனைமரங்களின் நன்மைகுறித்து விளக்கினார்.தோட்டக்கலை அலுவலர் சபிதா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பிரியா, பிரியங்கா, பாஸ்கர் கலந்து கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement