Advertisement

திடீர் மின்தடையால் அவதி

இளையான்குடி : இளையான்குடியில் நேற்று முன்தினம் முழுவதும் திடீரென ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

இளையான்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று முன்தினம் காலை 5;30 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது. மின்வாரியம் எந்தவித அறிவிப்பும் இன்றி அன்று மாலை வரை மின்வெட்டு செய்ததால், பள்ளி, அலுவலகம் செல்லும் மாணவர், ஊழியர்கள் காலையில் உரிய நேரத்தில் புறப்படமுடியாமல் அவதிப்பட்டனர். வர்த்தகர்கள் வியாபாரம் செய்ய மின்சார வசதியின்றி சிரமம் அடைந்தனர். விவசாயிகளும் நடவு செய்த பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்தனர்.இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இளையான்குடி துணைமின் நிலையத்தில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் மின் வினியோகம் தடைபட்டது. அன்று மாலைக்குள் சரி செய்யப்பட்டது, என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement