Advertisement

வாகன சர்வீஸ் மையமான வைகை ஆறு

மானாமதுரை : மானாமதுரை வைகை ஆற்றில் ஆபத்து அறியாமல் சிறுவர்கள் குளிப்பதும், வாகனங்களை ஆற்றிற்குள் இறக்கி சுத்தம் செய்துவருவதால், ஆற்று நீர் அசுத்தமாகி வருகிறது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீருக்காக நவ.,9 ல் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் வைகை நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் அடைந்தது. தேனி, வருஷநாடு மலைப்பகுதியில் நல்ல மழை பெய்ததால், 10 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் வரத்து இருப்பதால், ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவில்லை. இதனால் பேரூராட்சி அருகே கிழக்கு கரையில் இருந்து மேற்கு கரைக்கு செல்ல பாதை உள்ளது.

இதனால் இப்பாதை வழியே ஆற்றிற்குள் சிறுவர்கள் இறங்கி ஆபத்தை அறியாமல் குளிக்கின்றனர். மேலும், ஆற்று நீர் பாசனம், குடிநீர் தேவைக்காக பயன்படுகிறது என்பதை அறிந்தும், கண்டு கொள்ளாமல், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை ஆற்றிற்குள் இறக்கி, கழுவி வருகின்றனர். இதனால் ஆற்று நீர் அசுத்தமாகி வருகிறது. பொதுப்பணித்துறை நிர்வாகம், ஆற்றிற்குள் இறங்க தடை விதிக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement