Advertisement

தலைவர் பதவிக்கு களத்தில் மகள், மனைவி

இளையான்குடி : மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு (பொது பிரிவு) ஒதுக்கப்பட்டதால், அ.தி.மு.க.,வினர் தமது மகள், மனைவி, மருமகள்களை களத்தில் இறக்கி வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,- தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெற்று வருகிறது. அதில் மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சி தலைவர் பதவி (பொது) பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி அ.தி.மு.க.,வினர் தலைவர் பதவியில் போட்டியிட நிர்வாகிகள் பலர் தனது மகள், மனைவி, மருமகள்களை களம் இறக்க திட்டமிட்டு, கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெண்களுக்கு அதிக ஒதுக்கீடு செய்துள்ளனர். ஆனால், உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களின் நேரடி நிர்வாகம் இருந்தால் மட்டுமே, கிராமங்கள் வளர்ச்சி பெறும். எனவே ஆண்கள் தலையீடு இன்றி தேர்வாகும் பெண்கள் உள்ளாட்சியில் நிர்வாகம் செய்ய வேண்டும் என அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement