Advertisement

தி.மு.க., இளைஞர் பயிற்சி பாசறை கூட்டம்

ராஜாபாளையம் : ராஜபாளையம் சாஸ்தா கோவில் நீர்தேக்கம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் விருதுநகர் மாவட்ட தி.மு.க., இளைஞர் பாசறை பயிற்சி கூட்டம் நடந்தது.


காலை, மாலை இரு அமர்வாக நடந்த பயிற்சி கூட்டத்திற்கு தி.மு.க., இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது: தி.மு.க., இளைஞர் அணியில் 30 லட்சம் இளைஞர்களை இணைப்பதே இலக்கு. அதில் 50 சதவிகிதத்தை நிறைவு செய்து விட்டோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை ஆட்சிமொழியாக மாற்றுவோம் எனக் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைவர் ஸ்டாலின், போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார். அதன்பின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினை அழைத்து பேசி, போராட்டம் நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதில் இருந்தே அடுத்த ஆட்சி தி.மு.க., அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்பதை தெரிந்து கொள்ளலாம், என பேசினார். விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்துார் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ்குமார் எம்.பி., வரவேற்றனர். காலை அமர்வில் எம்.பி., ஆ.ராசா, திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பிலும், மதியம் அமர்வில் எம்.பி., திருச்சி சிவா, மொழிப்போர் என்ற தலைப்பில் பேசினர். மாவட்டத்தில் இருந்து வந்திருந்த 1,500 இளைஞர்கள் பங்கேற்றனர். ராஜபாளையம் எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement