dinamalar telegram
Advertisement

தொடக்்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு

Share
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே நரிக்குடி பகுதியில் விருதுநகர் மாவட்ட வேளாண்., உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ராஜேந்திரன் தலைமையில் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி யில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விவசாயத்திற்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது. அரசு நிர்ணயம் செய்த விலையை மட்டும் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். விற்பனை ரசீதை கட்டாயம் கொடுக்க வேண் டும். விற்பனை நிலையங்களில் உரம் விலை, இருப்பு விபரங்கள் விவசாயிகளுக்கு தெரியும்படி வைத்திருக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்கள் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். ஆய்வில் வேளாண் உதவி இயக்குநர் செல்வராஜ், வேளாண் அலுவலர்கள் முத்துலட்சுமி, ஜெயசந்திரா உடன் இருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement