Advertisement

யூரியாவை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

விருதுநகர் : விருதுநகரில் யூரியாவை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேளாண் இணை இயக்குனர் அருணாச்சலகனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு தேவையான அளவு யூரியா, இதர உரங்கள் பெறப்பட்டு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. யூரியா உரத்தை அரசு நிர்ணயித்த விலையான 45 கிலோ உர மூடைக்கு ரூ.266.50 க்கு கூடுதலாக விற்பனை செய்யக் கூடாது. மீறி கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு செல்லும் போது ஆதார் அட்டையுடன் சென்று, பி.ஓ.எஸ்., இயந்திரம் மூலம் ரசீது பெற்று உரம் வாங்க வேண்டும்.


யூரியா உரத்துடன் வேறு எந்த இடுபொருட்களையும் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது. கூடுதல் விலைக்கோ, முறையான உர உரிமம் இன்றியோ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண் அலுவலர்கள் மூலம் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட வட்டார உர ஆய்வாளர், வேளாண் உதவி இயக்குனர், வேளாண் அலுவலரை 04562 252740 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement