Advertisement

பிளவக்கல் அணையில் தொடரும் மழை 4500 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார் : பிளவக்கல் அணைப்பகுதியில் பெய்த மழையினால் நள்ளிரவில் 4500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கூமாபட்டி பகுதி கண்மாய்கள் நிரம்பியுள்ளது.

பிளவக்கல் அணையில் 45 அடி தண்ணீர் இருக்கும்நிலையில், கடந்த இரு நாட்களாக பெய்த மழையால், அணைக்கு நள்ளிரவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு, முதலில் 3500 கனஅடியும், பின்னர் 600 கனஅடி தண்ணீரும் திறந்து விடபட்டு, ஓடைகளில் நீர்வரத்து வெள்ளமாக ஓடியது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிளவக்கல் அணைப்பகுதியில் 63.2 மி.மீட்டர் மழை பெய்ததால், நள்ளிரவில் அணையிலிருந்து 4500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைக்கபட்டு நேற்று காலை அணையிலிருந்து வினாடிக்கு 898 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் கூமாபட்டி பகுதியிலுள்ள 6 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பியது. இரவில் தொடரும் மழையால், கண்மாய்களில் மட்டம் தட்டாத அளவிற்கு குறைத்து வைத்துக் கொள்ளும்படி பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. வரும் நவ.20 அன்று அணை திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.இதேபோல் 42 அடி உயரமுள்ள கோவிலாறு அணையில், தற்போது 31.83 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 101 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement