Advertisement

தேசிய கைப்பந்து போட்டி அரசு பள்ளி மாணவி தேர்வு

கும்மிடிப்பூண்டி: தேசிய அளவில் நடைபெற உள்ள கைப்பந்து போட்டியில், 17 வயதுக்கு உட்பட்ட தமிழக மகளிர் அணிக்கு தேர்வாகிய, அரசு பள்ளி மாணவியை, ஆசிரியர்களும், சக மாணவர்களும் பாராட்டினர்.

கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஜெயநாராயணன் -- ஹேமாவதி தம்பதியினர் மகள் சஹானா, 17. கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1, படித்து வருகிறார். கைபந்து விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர்.இந்திய பள்ளிகள் விளையாட்டு சம்மேளனம் சார்பில், விழுப்புரத்தில் நடைபெற்ற, 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கைப்பந்து அணி தேர்வில் பங்கேற்றார். தனியார் பள்ளி மாணவியருக்கு மத்தியில், தன் திறமையை சிறப்பாக வெளிபடுத்தியதால், அணியில் இடம் பிடித்தார்.வரும், ஜனவரி மாதம், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ள சஹானாவை, பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யப்பன், பிற ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement