Advertisement

மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் ஏலம் விடுவதில் போலீசார் மெத்தனம்

திருவாலங்காடு: மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்து, பல மாதங்கள் ஆகியும், அதை ஏலம் விடாததால், காவல் நிலைய வளாகத்தில், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகிறது.

திருவாலங்காடு காவல் நிலைய எல்லைக்குள் கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சிலர் அரசு அனுமதியை மீறி மாட்டு வண்டி, டிராக்டர், வேன் மற்றும் லாரிகள் மூலம் ஆற்றில் மணல் அள்ளி செல்கின்றனர்.அவ்வப்போது, திருவாலங்காடு போலீசார் வாகன தணிக்கை மற்றும் ஆற்றில் சோதனை நடத்தி, மணல் கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.இப்படி, ஓராண்டில், 100க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இந்த வாகனங்களை மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன் ஆண்டுதோறும் ஏலம் விடப்படும்.ஆனால், போலீசார் வாகனங்களை ஏலம் விடாமல் காவல் நிலைய வளாகத்தில் நிற்க வைத்துள்ளனர். இந்த வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், செடிகள் வளர்ந்து வாகனங்கள் வீணாகி வருகின்றன.எனவே, போலீசார் இனியாவது மெத்தனம் காட்டாமல், வாகனங்கள் வீணாகாமல் ஏலம் விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement