dinamalar telegram
Advertisement

விளையாட்டில்  ஊக்குவிப்பது ஆசிரியரின் கடமை 

Share
திருத்தணி: மாணவர்களை கல்வி கற்பதில் மட்டுமில்லாமல், விளையாட்டிலும் ஊக்குவிப்பது ஒவ்வொரு ஆசிரியரின் தலையாய கடமையாகும் என, மாவட்ட எஸ்.பி., அரவிந்தன், திருத்தணியில் நடந்த பள்ளி விழாவில் பேசினார்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த, முருக்கம்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் விளையாட்டு விழா நேற்று நடந்தது.இதில், பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு, திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன், பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசியதாவது:மாணவர்கள் தன்னம்பிக்கையுடன், விடா முயற்சி செய்தால், நினைத்த இலக்கை எளிதாக எட்டலாம்.மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே போல், விளையாட்டும் முக்கியமாகும்.மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிப்பது, ஒவ்வொரு ஆசிரியரின் தலையாய கடமையாகும்.மேலும், ஆசிரியர்கள், மாணவர்களை கண்காணித்து தகுந்த நேரத்தில் அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement