Advertisement

இளைஞர்களின் சமூக அக்கறை

ஆர்.கே.பேட்டை: சமூக சிந்தனையுடன் செயலில் இறங்கும் இளைஞர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஞாயிறு விடுமுறையை பயனுள்ளதாக கழித்து வருகின்றனர். நேற்று, கிணற்றை துார் வாரி சீரமைத்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், ஸ்ரீகாளிகாபுரம், அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், சில ஆண்டுகளாக மரக்கன்றுகளை நடவு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அம்மையார்குப்பம் கிராமத்தில், சுப்ரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள குளம் பாழடைந்து கிடந்தது.வரவேற்புஅம்மையார்குப்பம் இளைஞர்கள் கடந்த மாதம், இந்த குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஞாயிறு விடுமுறையில் ஒன்று கூடிய, 150 இளைஞர்கள், இதில் பங்கேற்றனர்.இதன் காரணமாக, புதர் மண்டி கிடந்த குளம், ஒரே நாளில் பொலிவு பெற்றது. இளைஞர்களின் இந்த சமூக அக்கறைக்கு, பொதுமக்களிடையே பலத்த வரவேற்பு நிலவியது.இதே பாணியில், பள்ளிப்பட்டு அடுத்த, மேலப்பூடி ஊராட்சிக்கு உட்பட்ட சொரக்காய்பேட்டை கிராமத்தில், பொது கிணறு ஒன்று, நேற்று, இளைஞர்களால், புத்துயிர் பெற்றது.சொரக்காய்பேட்டை ஒற்றைவாடை தெரு கிழக்கு பகுதியில், பாழடைந்து கிடந்த கிணறை, துார் வாரி சீரமைக்கும் பணியில், கிராமத்து இளைஞர்கள் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காலை முதல், மாலை வரை, இந்த பணியில் கூட்டாக பங்கேற்றனர்.விழிப்புணர்வுதங்களுக்கு அனுபவம் இல்லாத பணி என்றாலும், வேலையை திறமையாக மேற்கொண்டனர். கயிறு மற்றும் ஏணி உள்ளிட்ட வற்றின் உதவியுடன், 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில், சாதர்யமாக இறங்கி துார் வாரி சீரமைத்தனர்.இதன் தாக்கம், சுற்றுப்பகுதி இளைஞர்களிடையே நீர்நிலை பராமரிப்பு குறித்த விழிப்புணர்வையும், சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் துாண்டியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement