dinamalar telegram
Advertisement

மப்பேடு அருகே இரு கோவில்களில் திருட்டு

Share
மப்பேடு: மப்பேடு அருகே, இரு கோவில்களில் திருட்டு நடந்துள்ளது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்துள்ளது எறையாமங்கலம். இப்பகுதியில், தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவில் அருகே, செல்லியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை, பொதுமக்கள் தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்த பார்த்தபோது, கோவில் உண்டியல் உடைந்து கிடந்தது தெரிந்தது.இதேபோல், கோவில் அருகே இருந்த செல்லியம்மன் கோவில், கதவு பூட்டும் உடைந்து கிடந்தது கண்டனர்.மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மலிங்கேஸ்வரர் கோவில் உண்டியல் பணம் திருடு போனதாகவும், செல்லியம்மன் கோவிலில், அம்மன் சிலையிலிருந்த கம்மல், தாலி சரடு என, 3 சவரன் நகை மற்றும் கோவிலிலிருந்த வெண்கலப் பூஜைப் பொருட்கள் மாயமானதாகவும், மப்பேடு போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement